Connect with us

பாலாவின் ‘வணங்கான்’ சென்சார் சான்றிதழ் விவரங்கள் வெளியானது..!!

Cinema News

பாலாவின் ‘வணங்கான்’ சென்சார் சான்றிதழ் விவரங்கள் வெளியானது..!!

தேசிய விருது பெற்ற காரசார இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவான ‘வணங்கான்’ படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

உணர்ச்சிகள் பொங்கி வழியும் படங்களுக்கு பெயர் போன இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பாலா . தேசிய விருது பெற்று காரசார இயக்குநர் என்று பெயரெடுத்த இவரது இயக்கத்தில் உருவான அணைத்து படங்களும் இன்று வரை மக்கள் மனதில் நின்று பேசுகிறது.

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே வணங்கான். அருண்விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரோஷினி பிரகாஷ் கைகோர்க்க இவர்களுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கமிட்டாகி நடித்துள்ளனர் .

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது .

இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘வணங்கான்’ படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி வணங்கான் படத்திற்கு ’யூஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை - பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

More in Cinema News

To Top