Connect with us

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடர் – சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ..!!

Featured

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடர் – சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ..!!

இந்திய அணி அடுத்தமாதம் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் சுப்மன் கில் தலைமையிலான டி20 இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ரசிகர்களின் அமோக ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் செமி பைனலில் எந்தெந்த அணிகள் விளையாட போகிறது என்பதை காண அனைவரும் செம ஆவலாக உள்ளனர்.

இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை எந்த அணியுடனும் தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி வெற்றிநடை போட்டு வரும் நிலையில் நிச்சயம் டி20 உலகக்கோப்பையை வெல்லும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது .

ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை ஜிம்பாப்வே நாட்டில் இத்தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெற போகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது சுப்மன் கில் தலைமையிலான டி20 இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி பெயர் பட்டியல் :

சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ருதுராஜ், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜூரல் (WK), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே

இதில் துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைக்காட்சி வாயிலாக இந்தி திணிப்பு - செல்வப்பெருந்தகை காட்டம்..!!

More in Featured

To Top