Connect with us

புயலால் பிறந்த புதிய வாய்ப்பு : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளித்தது BCCI..!!

Featured

புயலால் பிறந்த புதிய வாய்ப்பு : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளித்தது BCCI..!!

ஜிம்பாப்வேவில் நடைபெற உள்ள டி20 போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது . இதில் சுமார் 17 வருடங்களுக்கு பின் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் கோப்பையை வென்ற புத்துணர்ச்சியுடன் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது .

ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை ஜிம்பாப்வே நாட்டில் இத்தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழும்பி இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சுப்மன் கில் தலைமையிலான டி20 இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது .

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 இந்திய அணி பட்டியல் :

சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ருதுராஜ், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜூரல் (WK), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகீல் அகமது, துஷார் தேஷ்பாண்டே

இதில் துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர் .

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் சிலர் அண்மையில் நடைபெற்ற டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்றிருந்தனர் இந்நிலையில் உலகக்கோப்பை வென்ற அணி புயலின் காரணமாக நாடு திரும்பாததால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக தற்போது மாற்றுவீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது

அதன்படி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . முதலிரண்டு டி20 போட்டிகளில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகிய 3 பேர் விளையாடுவர்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2025 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்..!!

More in Featured

To Top