Connect with us

“லேட்டஸ்ட்டாக வைரலாகிவரும், Beast படத்தின் BTS Photos! என்ன நெல்சா ஓகேவா..!”

Cinema News

“லேட்டஸ்ட்டாக வைரலாகிவரும், Beast படத்தின் BTS Photos! என்ன நெல்சா ஓகேவா..!”

சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக உள்ளார் விஜய். அவரது படங்களின் ரிலீசை இந்தியாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதேபோல அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர்கள் கவனித்து வருகின்றனர். அடுத்ததாக அவரது அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

விஜய்யின் புகைப்படங்கள், வீடியோக்கள் என எது வெளியே வந்தாலும் அது அவரது பழைய புகைப்படங்களாக இருந்தாலும் அதை கொண்டாட்ட மனநிலையுடன் அவரது ரசிகர்களை அணுகும் போக்கு உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் BTS புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தப் புகைப்படங்களில் அழகான மற்றும் எளிமையான விஜய்யை பார்க்க முடிகிறது. இந்தப் புகைப்படங்களில் இயக்குநர் நெல்சன் கூறுவதை அமைதியாக அதே நேரத்தில் கூர்ந்து கவனிக்கிறார் விஜய். தொடர்ந்து மானிட்டரில் சீன்களை பார்ப்பதாகவும், நெல்சனிடம் ஜாலியாக பேசுவதாகவும் இந்தப் புகைப்படங்கள் காணப்படுகின்றன.

நெல்சனின் டாக்டர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக விஜய்யுடன் அவர் பீஸ்ட் படத்தில் கூட்டணி அமைத்திருந்தார். இதையடுத்து இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் தவறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top