Connect with us

பெங்களூரு பவுலர்களை கதறவிட்ட ஹைதராபாத் அணி – பெங்களூரு அணிக்கு 288 ரன்கள் இமாலய இலக்கு..!!!

Featured

பெங்களூரு பவுலர்களை கதறவிட்ட ஹைதராபாத் அணி – பெங்களூரு அணிக்கு 288 ரன்கள் இமாலய இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி பெங்களூரு அணிக்கு 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள உலக புகழ் பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் RCB – SRH அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்த்து . இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது .

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் – ட்ராவிஸ் ஹெட் இணை தொடக்கம் முதல் கெத்து காட்ட கூடவே அத்திரைடியான பாட்னர்ஷிப்பும் உருவானது .

ஆனால் தொடர்ந்து அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் 34 ரன்களில் அவுட்டானார் . அடுத்து வந்த கிளாசென் , ஹெட்டுடன் கைகோர்த்து அதிரடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் .

வந்த நொடி முதல் அதிரடியில் மிரட்டிய ஹெட் 41பந்துகளில் 102 ரன்கள் குவித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார் . மறுபக்கம் அதிரடி காட்டி வந்த கிளாசென் 37 பந்துகளில் 67 ரன்களை குவித்தார்.

இந்த பக்கம் எய்டன் மார்க்ரம் அவர் பக்கம் வெளுத்து வாங்க அணியின் ஸ்கோர் எங்கேயோ சென்றது . இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 287 ரன்களை குவித்தது.

இதையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி வெறித்தனமாக பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விபத்தில் உயிரிழந்த த.வெ.க.வினர் - வேதனை தெரிவித்த விஜய்..!!

More in Featured

To Top