Connect with us

அசுர பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை அசால்டாக வீழ்த்தியது பெங்களூரு அணி..!!!

Featured

அசுர பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை அசால்டாக வீழ்த்தியது பெங்களூரு அணி..!!!

பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் RCB – SRH அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டியூபிலிசஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார் .

அதன்படி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஃபாஃப் டூப்ளசியை 25 ரன்களில் வெளியேற அடுத்து வந்த வில் ஜாக்ஸும் 6 ரன்களில் போல்டானார்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார் . இதேபோல் சிறப்பாக விளையாடி வந்த ரஜத் படிதாரும் அரைசதம் கடந்த நிலையில் வெளியேறினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 206 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர் . அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட் வெறும் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார் .

இந்த பக்கம் களம் கண்ட மற்றொரு வீரான அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் கண்ட மார்க்ரம் மற்றும் கிளாசனை ஒரே ஓவரில் வீழ்த்தினார் ஸ்வப்னில் சிங். அவர்களை தொடர்ந்து வந்த நிதிஷ் ரெட்டி, அப்துல் சமாத் ஆகியோரும் விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் நிதானமாக ஆடிய கேப்டன் கம்மின்ஸ் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க . 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு ஹைதராபாத் அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

இதன் மூலம் தொடர் தோல்வியில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த பெங்களூரு அணி கெத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது.

More in Featured

To Top