Connect with us

இறுதிவரை நீடித்த பரபரப்பு கடைசி பந்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பெங்களூரு அணி..!!!

Featured

இறுதிவரை நீடித்த பரபரப்பு கடைசி பந்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பெங்களூரு அணி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி கடைசி பந்தில் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் KKR – RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். ஆரம்பம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 48 ரன்களில் ஆட்டமிழந்தார் .

மற்றொரு தொடக்க வீரரான 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் . பின்னர் களமிறக்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க .

அடுத்ததாக ஜோடி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 222 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.

பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டூப்ளெசி களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது .

இதனையடுத்து வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதார் ஜோடி இணைந்து அணிக்கு தேவையான ரன்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கியது.இதனையடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற கடைசி 1ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு நாய்க்கு 23 ரன்கள் தேவைப்பட்டது .

இக்கட்டான சூழலில் களத்தில் இருந்த கரண்சர்மா அதிரடியாக பந்தை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு 2 பந்துகளுக்கு 3ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை ஏற்படுத்தினார்.எப்படியும் வென்றிடலாம் என நினைத்துக்கொண்டிருந்த போது கரண் சர்மா தனது விக்கெட்டை இழந்தார்

இதனையடுத்து 1பந்திற்கு மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் அடித்து ஆடிய சிராஜ் 2ரன்கள் எடுத்து சமன் செய்ய முயற்சித்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார் . இதன்காரணமாக 1ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி போராடி வீழ்ந்துள்ளது.

See also  விபத்தில் உயிரிழந்த த.வெ.க.வினர் - வேதனை தெரிவித்த விஜய்..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top