Connect with us

வான்கடே மைதானத்தில் மும்பை பந்துகளை சிதறடித்த பெங்களூரு அணி – மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு..!!!

Featured

வான்கடே மைதானத்தில் மும்பை பந்துகளை சிதறடித்த பெங்களூரு அணி – மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் MI – RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக அ விராட் கோலி மற்றும் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இதில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த கோலி ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் பேட்டிங்கில் அதிரடி காட்டிய டு பிளிஸ்சிஸ் அரைசதம் கடந்து அசத்தினார் .

ஆனால் இந்த பக்கம் ஆட வந்த கிளென் மாக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் மீண்டும் டக் அவுட் ஆக அவரை தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வந்த வழியில் விருட்டென சென்றனர்.

இறுதியில் வந்த தினேஷ் கார்த்திக் மும்பை பந்துகளை சிதறடிக்க அணியின் ஸ்கோர் மளமளவென ஏறியது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 196 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபல கால் பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து க்ளப்-ன் மேலாளர் திடீர் நீக்கம்..!!

More in Featured

To Top