Connect with us

KILL OR STAY : பிக் பாஸ் வீட்டில் ஒத்தைக்கு ஒத்தை நின்ற போட்டியாளர்கள் – வெளியான திக் திக் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

KILL OR STAY : பிக் பாஸ் வீட்டில் ஒத்தைக்கு ஒத்தை நின்ற போட்டியாளர்கள் – வெளியான திக் திக் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோ சற்று புதிதாக காட்சி படுத்தப்பட்டுள்ளது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 7ல் இறுதி மேடையை அலங்கரிக்கப்போகும் இறுதி போட்டியாளர்களுக்கான TICKET TO FINALE டாஸ்க் நடைபெறுகிறது.

இதில் நேற்று நடைபெற்ற தங்க முயல் MAX டாஸ்கில் சிறப்பாக விளையாடிய மாயா முதல் இடத்தையும் நிக்சன் இரண்டாவது இடத்தையும் பூர்ணிமா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இந்நிலையில் இன்று TICKET TO FINALE மூன்றாவது டாஸ்க் நடைபெறுகிறது KILL OR STAY என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பது போல் தெரிகிறது . இதில் போட்டியாளர்கள் எதிர் எதிரே அமர்ந்து வாக்குவாதம் செய்கின்றது இறுதியில் எந்த போட்டியாளருக்கு கில் கார்ட் அவர்கள் போட்டியில் இருந்து விலக வேண்டும் யாருக்கு ஸ்டே கார்ட் வருகிறதோ அவர்கள் போட்டியில் தொடரலாம் என கூறப்படுகிறித்து .

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் ஆவலுடன் பங்கேற்று விளையாட பரபரப்பான காட்சிகளுடன் முதல் ப்ரோமோ முடிகிறது.

தினம் தினம் நடக்கும் இந்த TICKET TO FINALE டாஸ்கின் இறுதியில் இறுதிப்போட்டிக்கு செல்லப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டது - காவல் ஆணையர் அருண்

More in Bigg Boss Tamil Season 7

To Top