Connect with us

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் தொகுப்பாளர் விஜய் சேதுபதி – வெளியானது புதிய ப்ரோமோ..!!

Cinema News

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் தொகுப்பாளர் விஜய் சேதுபதி – வெளியானது புதிய ப்ரோமோ..!!

உலககெங்கும் இருக்கும் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகி உள்ள நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் புதிய சீசனை தொகுத்து வழங்கப்போகும் புதிய நட்சத்திரத்தின் அறிமுக ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் .

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது . இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பேச்சை கேட்கவே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது .

இந்நிலையில் தொடர்ந்து 7 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அடுத்து வர இருக்கும் சீசனில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார் .

இதையடுத்து நடிகர் சிம்பு இந்நகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தகவல் பரவிய நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் 8 ஆவது சீசனை தொகுத்து வழங்க போகும் நட்சத்திரம் குறித்த அறிமுக ப்ரோமோ வெளியாகி உள்ளது .

அந்த ப்ரோமோவில் செம ஸ்டைலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வந்து நிற்கும் ப்ரோமோ வெளியாகி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக வலம் வருகிறது.

முதல் முதல் நடிகர் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதால் இந்த சீசன் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேவரா படத்தின் அதிரடியான ஆக்சன் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top