Connect with us

“பணப்பெட்டியில் பிக் பாஸ் வைத்த செம ட்விஸ்டு” – செம ஷாக்கில் போட்டியாளர்கள் – ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

“பணப்பெட்டியில் பிக் பாஸ் வைத்த செம ட்விஸ்டு” – செம ஷாக்கில் போட்டியாளர்கள் – ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பிக் பாஸ் செம ட்விஸ்ட் வைத்துள்ளார் .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பணப்பெட்டி டாஸ்க் குறித்த முக்கிய அறிவிப்பை பிக் பாஸ் கொடுக்கிறார் . அப்போது பிக் பாஸ்ஸிடம் பேசிய மணி பிக் பாஸ் கொஞ்சம் அமௌண்ட பெருசா வைங்க அப்பத்தான் யோசிக்க முடியும் என கூருகிறார் .

இதனை கேட்ட பிக் பாஸ் இந்த பணப்பெட்டிக்கு ஒரு கால அவகாசம் உள்ளது நேரம் ஆக ஆக இந்த பணப்பெட்டியில் உள்ள பணம் கூடவும் செய்யலாம் குறையவும் செய்யலாம் என பிக் பாஸ் செம ட்விஸ்டை போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார் . இதனை கேட்ட போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் சற்று குழப்பத்திலும் இருக்க அந்த ப்ரோமோவும் அப்படியே முடிகிறது.

கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் பணப்பெட்டி டாஸ்க் சற்று விறுவிறுப்பாக செல்வதால் இந்த சீசனில் பணப்பெட்டியை எடுக்கும் போட்டியாளர் யார் என்பதை அறிய பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மம்மூட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top