Connect with us

வெற்றிப்படமாக உருவெடுத்த ‘பிளாக்’ – நன்றி தெரிவிக்கும் விழாவில் எமோஷனலாக பேசிய ஜீவா..!!

Cinema News

வெற்றிப்படமாக உருவெடுத்த ‘பிளாக்’ – நன்றி தெரிவிக்கும் விழாவில் எமோஷனலாக பேசிய ஜீவா..!!

ஜீவாவின் Black திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் ஜீவா எமோஷனலாக பேசியது அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜிவா . என்னதான் பிரபல நடிகராக இருந்தாலும் ஜீவாவின் திறமைக்கேற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

இந்நிலையில் ஜீவாவின் நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி வெளியான பிளாக் திரைப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது .

பாலசுப்பிரமணியன் இயக்கத்தில் ஜீவா பிரியா பவானி சங்கர் நடித்த இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொண்டு பேசிய ஜீவா கூறியதாவது :

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு படத்தின் நன்றி அறிவிப்புக்கு வந்திருக்கிறேன். ‘பிளாக்’ படத்தின் வெற்றிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . இன்னும் நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்ற பொறுப்பு வந்திருக்கிறது.

’பிளாக்’ ஒரு மாஸ் திரைப்படமோ, காமெடி படமோ அல்ல. அடுத்து என்ன என்பது ரசிகர்களை யோசிக்கவைக்கும் படமாக இது இருந்தது. அப்படித்தான் எனக்குமே இருந்தது. ஏனென்றால் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காட்சிகள் படமாக்குவோம். நானே படமாக பார்க்கும் போது தான் தெரிந்தது. மக்களுடன் பார்க்கும் போது எனக்கே புதிதாக இருந்தது என ஜீவா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

More in Cinema News

To Top