Connect with us

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கேப்டன் விஜயகாந்த்..!!

Featured

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கேப்டன் விஜயகாந்த்..!!

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தற்போது உடல்நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே உயர் சிகிச்சை பெற்று வருகிறார் எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றும் உயர்தர மருத்துவ பரிசோதனைகளையும் விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

இதற்கிடையில் விஜயகாந்துக்கு தீவிர நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது .

இந்நிலையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண உடல்நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா..? ‘அமரன்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்..!!

More in Featured

To Top