Connect with us

இந்தியாவில் கார் விற்பனை 8% அதிகரிப்பு – கடந்தாண்டில் மட்டும் எத்தனை கார் விற்பனையாகிருக்கு தெரியுமா..?

Featured

இந்தியாவில் கார் விற்பனை 8% அதிகரிப்பு – கடந்தாண்டில் மட்டும் எத்தனை கார் விற்பனையாகிருக்கு தெரியுமா..?

இந்தியாவில் கார் விற்பனை 8% அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உலககின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நமது இந்திய திருநாட்டில் தற்போது கார் மோகம் அதிகரித்து வருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த காலத்தில் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்ட நாம் இன்று தரை , நீர் , ஆகாயம் விண்வெளி என கண்ணனுக்கு தெரியும் அணைத்தலிலும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி காலத்திற்கேற்ப நம்மை நாமே அப்டேட் செய்துகொண்டு வருகிறோம்.

அந்தவகையில் தற்போது வீட்டுக்கு ஒரு கார் என்பது இன்றைய காலத்தில் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது .அப்படி அனைவரும் வாங்க நினைக்கும் கார்களின் விலைகள் அடிக்கடி உயரப்பட்டு வந்தாலும் கார் வாங்கும் மோகம் மட்டும் நம் மக்களுக்கு குறையவே இல்லை .

அந்தவகையில் இந்தியாவில் கார் விற்பனை 8% அதிகரித்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2022-ஆம் ஆண்டு 38 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், 2023-ல் 41.10 லட்சமாக விற்பனை அதிகரித்துள்ளது . கடந்தாண்டில் மட்டும் அதிகபட்சமாக மாருதி சுசுகி நிறுவனம் 20 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2023-ஆம் ஆண்டில் விற்பனையான கார்களின் சராசரி விலை ரூ.11.50 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'Bloody Beggar' படத்தின் 2வது Sneak Peek வீடியோ வெளியானது..!!

More in Featured

To Top