Connect with us

மேம்பாலங்களில் நிற்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!!

Featured

மேம்பாலங்களில் நிற்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!!

கனமழையின் காரணமாக மேம்பாலங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :

“கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மழையின் காரணமாக வேளச்சேரி பாலம் மற்றும் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து காவலர்கள் விதித்த அபராதங்கள் திரும்ப பெறப்படும்.

சென்னையில் மழையால் விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. 10 மின்மாற்றிகளில் மட்டுமே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் சீராக மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.

100 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் பணிகளை மேற்கொள்ள சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். தண்ணீர் தேங்கிய இடங்களில் மோட்டார்கள் மூலம் நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கனமழை எச்சரிக்கை - மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி..!!

More in Featured

To Top