Connect with us

“நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘அன்னபூரணி’ படத்தின் Censor Certificate தகவல் வெளியானது!”

Cinema News

“நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘அன்னபூரணி’ படத்தின் Censor Certificate தகவல் வெளியானது!”

அதிக அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதில்தான் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களின் வெற்றி உள்ளது. இந்தத்தரம் கொண்ட திரைப்படங்கள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த வரிசையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ திரைப்படம் சிபி எஃப்சியின் ‘U’ சான்றிதழைப் பெற்று, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த தொழில்நுட்பத் தரத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் & டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

’உணவு’ என்ற தீம் கொண்ட இந்தப் படத்திற்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வசீகரமும் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது. படத்தில் ஜெய், சத்யராஜ் மற்றும் பிற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படம், குடும்ப பார்வையாளர்களுக்கு 100% பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க இருக்கிறது. சிபிஎஃப்சியின் ‘U’ சான்றிதழுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

உலகளவில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபிக்கும் வகையிலான கதைக்களத்துடன் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு - லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top