Connect with us

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது – அண்ணாமலை கலாய்

Featured

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது – அண்ணாமலை கலாய்

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, விளம்பர ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் திமுக, மீண்டும் ஒரு முறை, வாக்களித்த மக்களை பட்ஜெட் மூலம் நட்டாற்றில் நிறுத்தி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை கூறிருப்பதாவது :

ஆண்டு தோறும் தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் அதே அலங்கார வார்த்தைகளைத் தவிர, தமிழக அரசு சார்பில் உருப்படியான திட்டங்கள் என ஒன்றுமே இல்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த அதே திட்டங்கள், இதுவரை செயல்படுத்தப்படாமல், புதிய திட்டங்களைப் போல ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களைச் செயல்படுத்த எந்த நிதியும் திமுக ஒதுக்கியதாகத் தெரியவில்லை.

திமுகவின் நிதிநிலை அறிக்கையில், மத்திய அரசின் நலத் திட்டங்களை நீக்கி விட்டால், எஞ்சியிருப்பது. பேருந்து நிலையத்துக்குப் பெயர் வைப்பதும், ஒவ்வொரு ஆண்டும் வெறும் அறிவிப்பு அளவிலேயே நிற்கும் விளம்பரங்களும் மட்டும்தான்.

மத்திய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர் வைப்பது, அல்லது. மத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது என, மத்திய அரசின் திட்டங்களை, தங்கள் சிந்தனையில் உதித்தது போலக் காட்டிக் கொள்ளும் திமுக, தொலைநோக்குப் பார்வை இல்லாததால், தங்கள் நாடகத்தை முழுமையாக அரங்கேற்ற முடியாமல் மாட்டிக் கொள்வதுதான் நகைச்சுவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தை மனம் நெகிழ பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்..!!

More in Featured

To Top