Connect with us

என்ன மறுபடியுமா..? சென்னையில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த வானிலை மையம்

Featured

என்ன மறுபடியுமா..? சென்னையில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த வானிலை மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழக பகுதிகளில் அனேக இடங்களிலும், வட தமிழக பகுதிகளில் சில இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் டிச.16, 17 ஆகிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சென்னை வாசிகள் பீதியில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவ.10ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Featured

To Top