Connect with us

மக்களே கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க : புதிய மழை அப்டேட் கொடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

Featured

மக்களே கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க : புதிய மழை அப்டேட் கொடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் டிச.16,17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 15 ,16 ,17ம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (15.12.2023 – 17.12.2023) தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழையும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதில் டிச.16,17 ஆகிய தேதிகளில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவ.10ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Featured

To Top