Connect with us

எந்த தந்தையும் எதிர்கொள்ள கூடாத துயரம் இது – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Featured

எந்த தந்தையும் எதிர்கொள்ள கூடாத துயரம் இது – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சைதை துரைசாமியின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி இவரது மகன் வெற்றி. 45 வயதாகும் இவர் பிரபல சினிமா இயக்குநர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்று ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், வெற்றி துறைசாமி கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சல் பிரதேசத்திற்கு படத்திற்காக லொக்கேஷன் பார்க்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த வெற்றி துரைசாமியின் குழு லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை உள்ளூரை சேர்ந்த தஞ்சின் என்ற ஓட்டுனர் தான் ஓட்டிச் சென்றுள்ளார்.

கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .

இந்த கோர விபத்தில் காரை ஓட்டிய தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்

இதையடுத்து மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 8 நாட்களாக தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரது உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வெற்றி துரைசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அவரது குடுமபத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

இதையடுத்து வெற்றியின் மறைவுக்கு திரையுலகினர் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :

இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயபூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனது சிறுவயது நினைவுகளை மீண்டும் எனக்குள் கொண்டுவந்த படம் - மெய்யழகன் படக்குழுவை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்..!!

More in Featured

To Top