Connect with us

“Thalaivar 170 Shooting நிலவரம் இதுதானா?! தலைவருடன் மோதும் ஃபஹத் பாசில்! தரமான சம்பவம்!”

Cinema News

“Thalaivar 170 Shooting நிலவரம் இதுதானா?! தலைவருடன் மோதும் ஃபஹத் பாசில்! தரமான சம்பவம்!”

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம் பொங்கலுக்கு வெளியாகிறது. இன்னொரு பக்கம் தலைவர் 170 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெய்பீம் திரைப்படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த தசெ ஞானவேல், தலைவர் 170 ஐ இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. தலைவர் 170 படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதன்பின்னர் நெல்லை, கன்னியாகுமரி, மும்பையில் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் மும்பையில் ரஜினி – அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. கேமியோ ரோலில் நடிக்கும் அமிதாப் பச்சனின் காட்சிகள், 15 நிமிடங்கள் வரை தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து மும்பையில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி. தீபாவளி பிரேக்கிற்குப் பின்னர் மீண்டும் தலைவர் 170 ஷூட்டிங் தொடங்கியது. அதன்படி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலும் பங்கேற்றுள்ளாராம்.

இதனையடுத்து ரஜினிகாந்த் – ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் தசெ ஞானவேல். தலைவர் 170 படத்தில் ஃபஹத் பாசில் தான் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், ரஜினி – ஃபஹத் பாசில் இருவருக்குமான சில முக்கியமான காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருகிறதாம். சென்னை ஷெட்யூல் முடிந்ததும் மீண்டும் நெல்லையில் தலைவர் 170 ஷூட்டிங் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

அமிதாப் பச்சனை தொடர்ந்து ஃபஹத் பாசிலுடன் நடித்து வருகிறார் தலைவர். இதன் தொடர்ச்சியாக ராணா, மஞ்சு வாரியர் ஆகியோரும் ரஜினியுடன் இணையவுள்ளனர். வேகமாக நடைபெற்று வரும் தலைவர் 170 ஷூட்டிங், அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் என சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்தை 2024 சம்மர் ஸ்பெஷலாக வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top