Connect with us

பேட்டிங்கில் கெத்து காட்டிய டெல்லி – ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு..!!

Featured

பேட்டிங்கில் கெத்து காட்டிய டெல்லி – ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு..!!

நடப்பாண்டுக்கான IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 222 ரன்களை இலக்காக வைத்துள்ளது

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 56 ஆவது லீக் போட்டியில் DC – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக பிரஸ்ஸர் மற்றும் அபிஷேக் போரில் களமிறங்கினர் . ஆரம்பம் அதிரடி காட்டிய இந்த ஜோடி ராஜஸ்தான் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்த நிலையில் பிரஸ்ஸர் 50 ரன்னிலும் அபிஷேக் 65 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் அனைவரையும் அடுத்தடுத்து தட்டிதூக்கிய ராஜஸ்தான் பவுலர்கள் டெல்லி பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போட அடுத்ததாக வந்த ஸ்டப்ஸ் அணிக்கு தேவையான ரன்களை எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 221 ரன்களை குவித்தது . இதையடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'புல்லட்' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Featured

To Top