Connect with us

லண்டனில் சர்வதேச விருதை வென்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் – செம குஷியில் படக்குழு..!!

Cinema News

லண்டனில் சர்வதேச விருதை வென்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் – செம குஷியில் படக்குழு..!!

தனுஷின் நடிப்பில் திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட கேப்டன் மில்லர் திரைப்படம் லண்டனில் சர்வதேச விருதை வென்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் செம மாஸாக உருவான திரைப்படமே கேப்டன் மில்லர்.

மிக பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் குளோபல் ஸ்டார் தனுஷுடன் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் , சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் தரமாக தயாரான இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது .

ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் அயலக மொழிப்படத்துக்கான பிரிவில் தேர்வான கேப்டன் மில்லர் திரைப்படம் பல வெளிநாட்டு படங்களுடன் போட்டிப்போட்டு விருதை வென்று அசத்தியுள்ளது .

தமிழ்நாட்டில் உருவான கேப்டன் மில்லர் கடல் கடந்து சென்று சர்வதேச விருதை பெற்றிருப்பதால் தற்போது படக்குழுவினர் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உத்தராகண்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டிடுக - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top