Connect with us

100 கோடியை நெருங்கும் தனுஷின் ராயன் திரைப்படம் – 5 நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

Cinema News

100 கோடியை நெருங்கும் தனுஷின் ராயன் திரைப்படம் – 5 நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

தனுஷின் வெறித்தனமான இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் தற்போது சக்கை போடு போட்டு வரும் ராயன் படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

திரையுலகவில் இத்தனை நாட்கள் உலகம் போற்றும் உன்னத நடிகராக வலம் வந்த நடிகர் தனுஷ் தற்போது ஒரு இயக்குநராக அசுர தனமான வெற்றியை பெற்று செம குஷியில் உள்ளார் .

நடிகராக , பாடகராக , பாடலாசிரியராக திரையுலகை கலக்கி வந்த நடிகர் தனுஷ் ராயன் என்ற அவரது 50 ஆவது திரைப்படத்தின் மூலம் வெறித்தனமான இயக்குநர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் .

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் . கடந்த 26 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி ராயன் படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் அஜித் - ஷாலினி வெளியிட்ட தரமான போட்டோஸ்..!!

More in Cinema News

To Top