Connect with us

கர்நாடகவில் வந்தாச்சு தமிழ்நாட்டில் எப்போ – அரசுக்கு கேள்வி எழுப்பிய தினகரன்..!!

Featured

கர்நாடகவில் வந்தாச்சு தமிழ்நாட்டில் எப்போ – அரசுக்கு கேள்வி எழுப்பிய தினகரன்..!!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும் தமிழகத் தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் உடனடியாக சட்டம் இயற்ற அரசு முன்வர வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கர்நாடக தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் சட்ட மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் – தமிழக தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுவது எப்போது ?

கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவிகிதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 75 சதவிகிதமும், குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளில் 100 சதவிகிதம் கன்னடர்களுக்கே ஒதுக்குவது தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ”தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளை கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் அமைக்கப்படும் பன்னாட்டு மற்றும் வெளிமாநிலத் தொழிற்சாலைகள் மட்டுமின்றி உள்ளூர் தொழிற்சாலைகளிலும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க இது போன்ற சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் தனியார் தொழில் நிறுவனங்களில் அதிகளவில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் அதிகாரம் மாநில அரசிற்கு இருந்தும், அதனை செயல்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கு தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப்பெரிய துரோகமாகும்.

எனவே, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் தமிழகத் தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் - ஈபிஎஸ் விளாசல்..!!

More in Featured

To Top