Connect with us

தமன்னா குறித்து அவதூறாக பேசினேனா – பட்டென விளக்கம் கொடுத்த பார்த்திபன்..!!

Cinema News

தமன்னா குறித்து அவதூறாக பேசினேனா – பட்டென விளக்கம் கொடுத்த பார்த்திபன்..!!

தமன்னா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் பார்த்திபன் மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு தற்போது அவரே தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன். சமீபத்தில் இவர் இயக்கி நடித்த டீன்ஸ் படம் திரையரங்குகளில் நல்ல நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது அவ்ருக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

அன்மையில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பார்த்திபன் ஒரு படம் நல்லா ஓட மிகப்பெரிய காரணமாக தமன்னாவின் நடனம் அமைந்துவிடுகிறது என ரஜினியின் ஜெயிலர், படத்தையும், சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தையும் பார்த்திபன் மறைமுகமாக விமர்சித்து பேசியதாக நெட்டிசன்கள் அவர் மேல் வன்மத்தை கக்கினர்.

இந்நிலையில் தன்மேல் எழுந்துள்ள இந்த சர்ச்சைக்கு பார்த்திபன் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன் கூறியதாவது :

நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன் என தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விராட் கோலி உடனான நட்பு குறித்து மனம் திறந்த க்ளென் மேக்ஸ்வெல்..!!

More in Cinema News

To Top