Connect with us

ராயன் படத்தில் நடிக்க இத்தணை கோடி சம்பளம் வாங்கினாரா எஸ் ஜே சூர்யா..?

Cinema News

ராயன் படத்தில் நடிக்க இத்தணை கோடி சம்பளம் வாங்கினாரா எஸ் ஜே சூர்யா..?

தனுஷின் ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா ராயன் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் பதித்து இன்று பல மிரளவைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பு அரக்கனாக வலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. அந்தவகையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே ராயன்.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குங்களில் நேற்று வெளியான நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா இப்படத்தில் நடிப்பதற்காக வக்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ராயன் படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவுக்கு 8 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Break எடுத்த ஊழியரை பணி இடத்திலேயே சுட்டு கொன்ற சக ஊழியர் - அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

More in Cinema News

To Top