Connect with us

சீயான் விக்ரமின் தங்கலான் வென்றதா வீழ்ந்ததா..? முழு திரை விமர்சனம்..!!

Cinema News

சீயான் விக்ரமின் தங்கலான் வென்றதா வீழ்ந்ததா..? முழு திரை விமர்சனம்..!!

பல திரைக்கலைஞர்களின் கடின உழைப்பால் உருவான தங்கலான் திரைப்படம் உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ள நிலையில் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை முழு திரை விமர்சனத்தின் மூலம் காணலாம்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் , பார்வதி , பிரியங்கா மோகனன் பசுபதி உள்ளிட்ட பல திரைக்கலைஞர்களின் நடிப்பில் உருவான திரைப்படமே தங்கலான்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் மெட்டெடுக்கப்பட்ட இப்படம் 78 வது சுதந்திர தினமான இன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியாகி உள்ளது.

படத்தின் முழு திரைவிமர்சனம் :

கதையின் நாயகனாக வரும் விக்ரம் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மக்களுடன் வாழ்ந்து வருகிறார். ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் நாடே அடிமைப்பட்டு கிடந்த அந்த காலத்தில் நடக்கும் கொடுமைகள் ஆரம்பத்தில் அங்கங்கே பார்க்க முடிகிறது

பொறுத்தது போதும் பொங்கி எழு என்பது போல் தனது குடும்பத்தையும் தன்னை சார்ந்த மக்களையும் கொடூரர்களிடம் இருந்து காப்பாற்றி வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல கதையின் நாயகனான விக்ரம் முயற்சிக்கிறார் .

அப்போது வெள்ளைக்காரன் தங்கம் தேடும் வேலையை தங்கலான் மக்களுக்கு கொடுக்கிறான் தங்கம் தோண்டி கொடுத்தால் அதிக சம்பளம் தருவதாக வெள்ளைக்காரன் கூறியதால் மிராசிடம் இருக்கும் நிலங்களை மீண்டும் வாங்கிவிடலாம் என நினைத்து தனது மக்களை தங்கம் தோண்டும் இடத்திற்கு விக்ரம் அழைத்து செல்கிறார்.

இதையடுத்து தங்கம் தோண்டும் இடத்தில் என்ன நடக்கிறது அங்கு என்னென்ன சவால்கள் நிறைந்திருந்தது அதிலிருந்து விக்ரம் மற்றும் தங்கலான் மக்கள் எப்படி மீண்டு வந்தனர் என்பதே படத்தின் மீதி கதை.

இதனை படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் முடிந்த வரை பாமர மக்களுக்கு புரியும் வகையில் எடுக்க முயற்சித்துள்ளார் . இருப்பினும் நிறைய காட்சிகளில் படத்தை புரிந்து கொள்ள முடியாத சூழல் எழுகிறது .நிறைய இடத்தில படத்தின் காட்சிகள் அருமையாக வந்துள்ளது .

படத்தில் நடித்த அணைத்து கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை சிறப்பாக செய்துள்ளனர் குறிப்பாக சீயான் விக்ரம் தெய்வ பெண்ணாக வரும் பிரியங்கா மோகனன் பார்வதி உள்ளிட்டோரின் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது .

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் பாராட்டை பெரும் வகையில் உள்ளது . இதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் படத்தில் எங்கெங்கெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் தனது பின்னணி இசையால் ரசிகர்களின் இருக்கையில் கட்டிபோட்டுள்ளார் , பாடல்களும் அருமையாக இடம்பெற்றுள்ளது .

தங்கலான் படத்தை விமர்சிக்க நிறைய விஷயங்கள் இருந்தாலும் படத்தை பாராட்டவும் அதைவிட பால் விஷயங்கள் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

See also  தொடர்ந்து சரியும் கச்சா எண்ணெய் விலை - பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அன்புமணி வலியுறுத்தல்..!!

ஆகமொத்தம் தங்கலான் படத்திற்கு ரேட்டிங் கொடுக்க வேண்டும் என்றால் 3.5/5 என்று கொடுக்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top