Connect with us

“Dilli will return soon” கைதி 2 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!!

Cinema News

“Dilli will return soon” கைதி 2 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!!

கைதி திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்டுள்ள பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான திரைப்படம் கைதி . திரையரங்குகளில் சத்தமின்றி வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று சக்கை போடு போட்டது.

கார்த்தி,தீனா,நரேன் உளப்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தில் நாயககியே இல்லையென்றாலும் கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பிற்காக ஏகபோக பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இது எல்லாம் இங்கிருந்து தான் தொடங்கியது இதைச் செய்ததற்காக கார்த்தி சார், பிரபு சார் மற்றும் ‘பிரபஞ்சம்’ அவர்களுக்கு நன்றி . விரைவில் டில்லியின் பயணம் தொடரும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.1ம் தேதி) விடுமுறை அறிவிப்பு..!!

More in Cinema News

To Top