Connect with us

வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் – வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

Cinema News

வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் – வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் இயக்குனரும் நடிகருமான அமீர் வில்லனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த ’கங்குவா’ படம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது .

இதனை அடுத்து நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் பிரபல இயக்குனர் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார் .

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’வடசென்னை’ திரைப்படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்றும், அப்போதே ‘வாடிவாசல்’ படத்தில், அவரை நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்து விட்டதாகவும் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் வாடிவாசல் படத்தில் அமீர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தில் அமீர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இயக்குனர் அமீர் கூறியதாவது :

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!!

More in Cinema News

To Top