Connect with us

மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் குடும்பத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நிதி உதவி..!!

Cinema News

மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் குடும்பத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நிதி உதவி..!!

மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.ஆர்.முருகதாஸ் நிதி உதவி வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட சூப்பர் ஹிட் குடும்ப படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் ராசு மதுவரன் .

திரைத்துறையில் ஜொலிக்க தொடங்கிய நிலையில் கடந்த 2013 திடீரென இயக்குநர் ராசு மதுவரன் காலமானார். அவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது .

இந்நிலையில் மாயாண்டி குடும்பத்தார் முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களின் மூலம் பட்டிதொட்டி எங்கும் கண்கலங்க வைத்த மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் குடும்பம் கஷ்டத்தில் உள்ளது என தகவல் வெளியான நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் நிதியுதவி செய்துள்ள நிலையில் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் ராசு மதுரவனின் இரண்டு மகள்களின் கல்விக்கு உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமலின் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top