Connect with us

ஆழமான வலிமையான படம் கொட்டுக்காளி – இயக்குநர் பாலா பாராட்டு..!!

Cinema News

ஆழமான வலிமையான படம் கொட்டுக்காளி – இயக்குநர் பாலா பாராட்டு..!!

சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தை கண்டுகளித்த இயக்குநர் பாலா கொட்டுக்காளி படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.

அறிமுக இயக்குநராக சினிமாவில் களமிறங்கிய வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியான கூழாங்கல் திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்ற நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் அடுத்த படமே கொட்டுக்காளி .

எஸ்.கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிகை அவருடன் கேரளா நடிகை அண்ணா பென் உள்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குநர் பாலா கொட்டுக்காளி படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.

இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று, இந்தக் கொட்டுக்காளி. ஆழமான இக்கதையை, எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

இயக்குநர் வினோத்ராஜ் குறிப்பாக, சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து. ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழ்ச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி, அன்னா பென்.

படத்தில் நடித்திருக்கும் அனைவருமே, தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம்தான் என்று சவால்விட்டிருக்கிறார்கள். காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர்.

சிவகார்த்திகேயனுக்கு, வினோத்ராஜ் சார்பாக, எனது நன்றிகள் சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். கொட்டுக்காளி படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள் என இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விறுவிறுப்பாகும் ‘அமரன்’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!!

More in Cinema News

To Top