Connect with us

நிதி நெருக்கடியில் சிக்கிய இயக்குநர் ராசு மதுரவனின் குடும்பம் – சிவகார்த்திகேயன் செய்த மறக்க முடியாத உதவி..!!

Cinema News

நிதி நெருக்கடியில் சிக்கிய இயக்குநர் ராசு மதுரவனின் குடும்பம் – சிவகார்த்திகேயன் செய்த மறக்க முடியாத உதவி..!!

மறைந்த இயக்குநர் ராசு மதுரவனின் குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மறக்க முடியாத உதவியை செய்துள்ளதாக ராசு மதுரவனின் மனைவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட சூப்பர் ஹிட் குடும்ப படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் ராசு மதுவரன் .

திரைத்துறையில் ஜொலிக்க தொடங்கிய நிலையில் கடந்த 2013 திடீரென இயக்குநர் ராசு மதுவரன் காலமானார். அவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது .

இந்நிலையில் அவரது நினைவு நாளில் தங்களது குடும்ப நிலை குறித்து அவரது மனைவி பவானி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் என் கணவர் படத்துல அத்தனை நடிகர்கள், அத்தனை இயக்குநர்கள் நடிச்சிருக்காங்க. இதுவரைக்கும் எங்கக்கிட்ட யாரும் பேசினது கிடையாது. ஆனா, பிரபல பத்திரிகையில் வந்த செய்தியை படிச்சுட்டு சிவகார்த்திகேயன் சார், என்னோட ரெண்டு பிள்ளைகளுக்குமான இந்த வருட ஸ்கூல் ஃபீஸ் 97,000 ரூபாயைக் கட்டினார்.

சிவகார்த்திகேயனுக்கும் என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் கணவரோட இயக்கத்துலகூட அவர் நடிச்சதுமில்ல. எங்களோட நிலைமையையும் கஷ்டத்தையும் புரிஞ்சுக்கிட்டு இப்படியொரு ஒரு உதவியைச் செஞ்சது ரொம்பவே சந்தோஷமா இருக்கு என இயக்குநர் ராசு மதுரவனின் மனைவி பவானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'கூலி' படத்தில் தலைவர் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா..? சஸ்பென்ஸ் வைத்த படக்குழு..!!

More in Cinema News

To Top