Connect with us

“கார்த்திக் சுப்புராஜ் சொல்ற மாதிரி சினிமா கிடையாது..! இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன விஷயம்!”

Cinema News

“கார்த்திக் சுப்புராஜ் சொல்ற மாதிரி சினிமா கிடையாது..! இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன விஷயம்!”

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

F-d9IxDbcAAjWkK

சினிமா எந்தளவிற்கு வலிமையான ஊடகம் என உணர்த்தும் வகையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அதேபோல், ஜிகர்தண்டா படத்தின் டைட்டிலில் ‘Arts choose of you’ என கேப்ஷன் கொடுத்திருந்தார். அதாவது கலையே உன்னை தேர்ந்தெடுக்கும் எனக் கூறியிருந்தார். ஒரு கலை தான் படைப்பாளனையோ கலைஞனையோ அடையாளப்படுத்துவதாக இது அமைந்தது.

இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் கொடுத்துள்ளார். வெற்றிமாறன், அமீர், ஜெயம் ராஜா, சித்தா இயக்குநர் அருண் குமார், நிதிலன் ஆகியோர் பங்கேற்ற பேட்டியில், Arts choose of you குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை கேட்ட வெற்றிமாறன், “அதெல்லாம் கண்டிப்பாக கிடையாது, நாம் தேர்ந்தெடுப்பது தான் கலை, சினிமா. அதுவாக நம்மை தேர்ந்தெடுக்காது” என அடித்துக் கூறியுள்ளார்.

பாலுமகேந்திரா சாரிடம் அசிஸ்டெண்ட்டாக சேர வேண்டும் என நான் தான் முடிவு செய்தேன். அவர் என்னை அசிஸ்டெண்ட் டைரக்டர் என செலக்ட் செய்யவில்லை. இதனை நானே அவரிடம் பலமுறை கூறியுள்ளேன். அதேபோல் தான் Arts choose of you என்பது சும்மா வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என்றுள்ளார். அதேபோல் இயக்குநர் ஜெயம் ராஜாவும் இதனை மறுத்துள்ளார்.

Arts choose of you என ஒரு கலை நம்மை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு இன்னும் நாம் வளரவில்லை. அதற்கெல்லாம் இன்னும் நேரம் வேண்டும். இதனை கேட்கும் போது கவுண்டமணியின் “சாட்டையடிக்கிற நாய்க்கு எதுக்குடா கம்பராமாயணம்” என்ற காமெடி தான் நினைவில் வரும் என பங்கமாக கலாய்த்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிகப் பெரிய வெற்றி விஜய்யின் முதல் மாநில மாநாடு - வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

More in Cinema News

To Top