Connect with us

சர்வதேச அங்கீகாரம் பெற்ற சூரியின் கொட்டுக்காளி 3 நாளில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

சர்வதேச அங்கீகாரம் பெற்ற சூரியின் கொட்டுக்காளி 3 நாளில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

சர்வதேச அங்கீகாரம் பெற்று வெற்றி படமாக மாறியுள்ள சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் மூன்று நாட்களில்க் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

வெளிநாடுகளில் திரையிடப்பட்டு பல சர்வதேச விருதுகளை பெற்ற கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத் ராஜின் அடுத்த படைப்பே கொட்டுக்காளி .

எஸ்.கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க அவருடன் கேரளா நடிகை அண்ணா பென் உள்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே சர்வதேச அங்கீகாரம் பெற்று வெற்றிப்படமாக மாறியுள்ள இப்படம் வணிக ரீதியாகவும் தற்போது வெற்றி படமாக மாறியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, கொட்டுக்காளி திரைப்படம் மூன்று நாளில் ரூ.1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'கடைசி உலகப் போர்' படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!

More in Cinema News

To Top