Connect with us

கமல்ஹாசனின் இந்தியன் 2 தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

கமல்ஹாசனின் இந்தியன் 2 தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களுக்கும் மேலாகி உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரெடுத்த ஷங்கர் கூட்டணியில் கடந்த 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் இந்தியன் 2.

கமல் உள்பட இப்படத்தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா , எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்துள்ளது .

இந்நிலையில் இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ள இப்படம் வசூலிலும் சற்றும் மந்தமாக இருந்ததாக கூறப்பட்டது . அந்தவகையில் தற்போது இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி , இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளில் ரூ. 51.75 கோடி வரை இந்தியன் 2 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “என் மகன் யுவ்ராஜ் சிங்கின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார்” - யோக்ராஜ் சிங் ஆவேசம்

More in Cinema News

To Top