Connect with us

வெற்றிநடைபோடும் தங்கலான் திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

வெற்றிநடைபோடும் தங்கலான் திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சீயான் விக்ரம் உள்பட பல இளம் நட்சத்திரங்களின் கடின உழைப்பில் உருவான தங்கலான் திரைப்படம் உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியாகி உள்ள நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அசத்தலான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் , பார்வதி , பிரியங்கா மோகனன் பசுபதி உள்ளிட்ட பல திரைக்கலைஞர்களின் நடிப்பில் உருவான திரைப்படமே தங்கலான்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் மெட்டெடுக்கப்பட்ட இப்படம் சுதந்திர தினமான நேற்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி தற்போது சக்கை போடு போட்டு வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூலிலும் அசத்தி வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தங்கலான் திரைப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top