Connect with us

காட்சிக்கு காட்சி கொடுக்கும் பதற்றம் – டிமாண்டி காலனி 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

காட்சிக்கு காட்சி கொடுக்கும் பதற்றம் – டிமாண்டி காலனி 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது கொண்டாடும் படமாக மாறியுள்ள டிமாண்டி காலனி 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய வித ஹாரர் படமாக ரசிகர்களுக்கு அருமையா விருந்தளித்த திரைப்படமே ‘டிமாண்டி காலனி’ .காட்சிக்கு காட்சி ஏராளமான ட்விஸ்டுகளும் பின்னணி இசையும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் வியர்வையுடன் இப்படம் அமரவைத்ததது .

இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பல வகையில் பூர்த்தி செய்து அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் சக்க போடு போட்டது . இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தரமாக தயாரான நிலையில் சுதந்திர தினமான நேற்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

முதல் பாகத்தை போலவே இப்படத்தில் நடிகர் அருள் நிதி சிறப்பான நடிப்பை வெளியிப்படுத்தி உள்ளார் அவருடன் இணைந்து பிரியா பவனி சங்கரும் கலக்கி உள்ளார் .

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஏராளமான பதற்றமான காட்சிகளுடன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் வெற்றிப்படமாக உருவெடுத்து வரும் இப்படம் முதல் நாளில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு - லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top