Connect with us

திரையரங்குகளில் வெற்றிநடைப் போடும் மகாராஜா திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் வெற்றிநடைப் போடும் மகாராஜா திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘மகாராஜா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வில்லன் ஹீரோ என பல அவதாரங்களில் கலக்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி , மலையாளம் என பல மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘மகாராஜா’ . நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியான நிலையில் படத்தின் மீதான விமர்சனங்கள் நல்ல முறையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது அதன்படி இப்படம் உலகளவில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து எழுந்த குற்றச்சாட்டுகள் - உறுதுணையாக நின்ற நடிகர் சங்கத்திற்கு உருக்கமாக நன்றி சொன்ன நடிகர் தனுஷ்..!!

More in Cinema News

To Top