Connect with us

திரையரங்குகளில் கொண்டாடப்படும் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் கொண்டாடப்படும் ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?

அசுர நாயகன் தனுஷின் 50வது படமான ராயன் படம் திரையரங்குகளில்வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த லேட்டஸ்ட் விவரம் வெளியாகி உள்ளது.

உலககெங்கும் இருக்கும் ரசிகர்களால் குளோபல் ஸ்டார் என்று அன்போடு அளிக்கப்படும் நடிகர் தனுஷின் 50வது படமே ராயன் . நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தரமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் நேற்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதும் மட்டுமல்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

அதன்படி ராயன் படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.15 கோடியும், வெளிநாடுகளில் ரூ.5.50 கோடியும் வாசில் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆகமொத்தம் ராயன் திரைப்படம் உலகளவில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நல்ல பெயரெடுத்த வாழை திரைப்படம் - இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி..!!

More in Cinema News

To Top