Connect with us

வசூலை வாரிக்குவிக்கும் ‘மகாராஜா’ திரைப்படம் – 3 நாட்கள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?

Cinema News

வசூலை வாரிக்குவிக்கும் ‘மகாராஜா’ திரைப்படம் – 3 நாட்கள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் 50வது படமான மஹாராஜா திரைப்படம் திரையரங்குகளில் தூள் கிளப்பி வரும் நிலையில் அப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வில்லன் ஹீரோ என அனைத்திலும் பட்டயகிளப்பி வரும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி , மலையாளம் என பல மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘மகாராஜா’ கடந்த ஜூன் 14 ஆம் தேதி உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் வெளியானது .

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்கள் பெற்று வந்த நிலையில் தற்போது வசூலிலும் சக்கை போடு போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மஹாராஜா திரைப்படம் வெளியான முன்று நாட்களில் மொத்தம் ரூ 22.45 கோடிகளை வசூல் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமலின் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top