Connect with us

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

Cinema News

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மெய்யழகன் . பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி காம்போவில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இதைதொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படமே ‘வா வாத்தியார்’ நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படம் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .

அதன்படி விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் ‘Bloody Beggar’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top