Connect with us

திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட கருடன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட கருடன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா..?

கலக்கல் நாயகன் சூரியின் அசத்தலான நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட கருடன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று கதையின் நாயகனாக கலக்கி வரும் நடிகர் சூரியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே கருடன் .

சூரி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சமுத்திர கனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா , ரோஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள இப்படம்
மொத்தமாக 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது . அதன்படி, கருடன் திரைப்படத்தின் OTT உரிமையை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளதாகவும் ஜூலை மாதம் இப்படம் OTT-யில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா மக்கள் - முதல் ஆளாக நிதி உதவி வழங்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!!

More in Cinema News

To Top