Connect with us

‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது .

உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் குடுக்கும் படங்களுக்கு பெயர் போன இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பாலா . இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இவரது படங்கள் இன்று வரை நின்று பேசுகிறது .

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் வணங்கான். ஆரம்பத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமான இந்த படத்தில் திடீரென சூர்யா விலகியதால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் நடிக்க நடிகர் அருண் விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து கதையின் நாயகனாக அருண்விஜய் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ரோஷினி பிரகாஷ் கைகோர்க்க இவர்களுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இப்படத்தில் கமிட்டாகி நடித்துள்ளனர் .

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தின் ட்ரைலருக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லர் வரும் 8ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு - லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top