Connect with us

விறுவிறுப்பாக உருவாகும் சர்தார் 2 படத்தின் கதாநாயகி யார் தெரியுமா..?

Cinema News

விறுவிறுப்பாக உருவாகும் சர்தார் 2 படத்தின் கதாநாயகி யார் தெரியுமா..?

கார்த்தியின் அசத்தலான நடிப்பில் தற்போது உருவாகி வரும் சர்தார் 2 படத்தின் கதாநாயகி குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் தனது நேர்த்தியான நடிப்பால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார்.

ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தில் கார்த்தியுடன் , ராஷி கன்னா, லைலா, ராஜீஷா விஜயன், யுகி சேது உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்திலும் ஏராளமான ட்விஸ்டுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் என்பவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

நடிகை ஆஷிகா ரங்கநாத் பட்டத்து அரசன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திராவிட சாயலில் பயணிக்கிறாரா விஜய்..? - தமிழிசை விமர்சனம்..!!

More in Cinema News

To Top