Connect with us

எனது படத்திற்காக கட்சி பெயரை பயன்படுத்த வேண்டாம் – தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்..!!

Cinema News

எனது படத்திற்காக கட்சி பெயரை பயன்படுத்த வேண்டாம் – தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்..!!

விஜய் நடிப்பில் ‘தி கோட்’ திரைப்படம் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தனது படத்தின் ப்ரோமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்த வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அதற்குள் அவர் கமிட்டாகி உள்ள படங்களை முடித்து விட்டு பிறகு நடிக்க போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது விஜயின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படமே ‘தி கோட்’ . AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா , லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் இப்போதிலிருந்தே தொடங்கி நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் தனது படத்தின் ப்ரோமோஷனுக்காக கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட ட்ரைலர் வெளியானது..!!

More in Cinema News

To Top