Connect with us

’எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு – வேதனையுடன் அறிவித்த கங்கனா..!!

Cinema News

’எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு – வேதனையுடன் அறிவித்த கங்கனா..!!

பிரபல பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பியுமான நடிகை கங்கனா எழுதி இயக்கி உள்ள எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத் . தமிழ்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படமே ‘Emergency’.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை கங்கனா இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் .

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்.6 ஆம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகை கங்கனா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

நான் இயக்கிய ’எமர்ஜென்சி’ திரைப்படம் தள்ளிப்போவதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். தணிக்கை குழுவிடம் இருந்து சான்றிதழ்பெற காத்திருக்கிறோம். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு - போட்டோவுடன் அறிவித்த படக்குழு..!!

More in Cinema News

To Top