Connect with us

இம்முறை எல்லாமே புதுசுதான் போல – பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா..?

Cinema News

இம்முறை எல்லாமே புதுசுதான் போல – பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா..?

உலககெங்கும் இருக்கும் தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் பல இணையத்தில் உலா வரும் நிலையில் தற்போது இந்த சீசனில் கலந்துகொள்ள போகும் புதிய போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி வழக்கம் போல வைரலாகி வருகிறது .

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியே பிக் பாஸ் .

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து வர இருக்கும் சீசனில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக உயர்ந்தது.

இந்நிலையில் அக்டொபர் 6 ஆம் தேதி முதல் பிக் பாஸ் 8 தொடங்க உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்த விவரங்களை அறிய ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.அதற்கேற்றாற் போல் இணையத்தில் பலரது பெயர்கள் வந்து செல்கிறது.

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகும் போட்டியாளர்கள் குறித்த மற்றொரு பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் , சௌந்தர்யா , சந்தோஷ் பிரதாப் , பால் டப்பா , பவித்ரா ஜனனி , தர்ஷா குப்தா , ஜாக்குலின் , ரஞ்சித் , அர்னவ் , அக்ஷிதா , தீபக் , அருண் , விஷால் , கோகுல் , சுனிதா உள்ளிட்டோர் இந்த சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்..!!

More in Cinema News

To Top