Connect with us

லோகேஷ் – ரஜினிகாந்த் காம்போவில் உருவாகும் கூலி படத்தில் இணைந்த பிரபல நடிகர் – வெளியானது சிறப்பு போஸ்டர்..!!

Cinema News

லோகேஷ் – ரஜினிகாந்த் காம்போவில் உருவாகும் கூலி படத்தில் இணைந்த பிரபல நடிகர் – வெளியானது சிறப்பு போஸ்டர்..!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி வரும் கூலி பிரபல நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது .

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ் . இவரது இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படமே கூலி.

இந்நிலையில் லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் கம்போவில் உருவாகும் இந்த படம் எந்த கதையம்சம் கொண்டதாக இருக்கும் லோகேஷின் கடந்த படங்களை போல இந்த படத்திலும் ஏரளமான சண்டை காட்சிகள் இருக்குமா என்ற ஆர்வம் இப்போதிலிருந்தே ரசிகர்கள் மனதில் அழுத்தமாக எழுந்துள்ளது.

நாட்கள் செல்ல செல்ல கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது கூலி படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது .

அதன்படி தற்போது கூலி படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் நாகர்ஜுனா இணைந்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10 நாட்களில் GOAT படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top