Connect with us

திருடர்களை பிடிக்க முயன்றபோது நடந்த சோகம் – பிரபல ஹாலிவுட் நடிகர் சுட்டு கொலை..!!

Cinema News

திருடர்களை பிடிக்க முயன்றபோது நடந்த சோகம் – பிரபல ஹாலிவுட் நடிகர் சுட்டு கொலை..!!

அமெரிக்காவில் திருடர்களை பிடிக்க முயன்றபோது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் இருக்கும் பிரபல நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜானி வாக்டர். General Hospital என்ற தொலைக்காட்சி தொடர், USS Indianapolis: Men of Courage, Siberia உள்ளிட்ட பல படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றுள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் 37 வயதாகும் நடிகர் ஜானி வாக்டர் தனது வீட்டிற்கு வந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது திருடர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சமத்துவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ஜானி வாக்டரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் சீர்கேட்டை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் பணி நீக்கம் - இ.பி.எஸ் கண்டனம்..!!

More in Cinema News

To Top